politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

20.11.11

இந்த வாரம்

இந்த வாரம் நடந்த அரசியல் விவாதங்களில் சில, சுவையாக இருந்தது...
ஆனால் பெரும்பாலானோர் தவறான பார்வையில் இருப்பதாக எனக்கு படுகிறது...

ஒன்று:

மல்லய்யா, அரசின் தவறான கொள்கைகளால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும்.. அதனால் அரசு அவருக்கு உதவி புரிவது தப்பில்லை என்றும்... மிகவும் விலை குறைவாக விமான சேவை நடத்துவது நடுத்தர மக்களுக்கு உதவி புரியவே என்றும்.. ஆகையால் அவருக்கு அரசு கை தூக்கி விட வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்... இங்கு பலர் அவரின் ஆடம்பரமான வாழ்வை பார்க்காமல் பெட்ரோல் விலை வாசி மட்டுமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டு பிடித்துள்ளனர்...

ஆணிவேர் பார்வை:

உங்கள் வீட்டருகே இருக்கும் ஆட்டோ காரர்கள் மக்கள் நலன் கருதி மிகவும் சிறிய தொகையை கட்டணமாக வாங்கி நொடித்து போய், அரசு தான் காரணம் என்றால் என்ன சொல்வீர்கள்?
ஆட்டோ காரர்கள் என்றால் சண்டைக்கு செல்லும் இவர்கள் விமான நிறுவனம் என்றால் இரக்கப் படுவது எதனால்?

இரண்டு:

பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், ஆனால் தவிர்த்திருக்கலாம் என்றும், தனியார் மயமாக்கி இருந்தால் சேவை தரமாக இருந்திருக்கும் என்றும் பலர் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் எதோ ஒரு மாற்றத்தை தேடி அம்மையாருக்கு ஓட்டு போட்டவர்கள் என்பது இவர்களின் ஆதங்கமும், கோபமும், உணர்ச்சி வயப் பட்ட நிலையும் காட்டி கொடுக்கிறது..

ஆணிவேர் பார்வை:

பேருந்து கட்டண உயர்வு கண்டிப்பாக வேண்டும் என்று பல்வேறு தனியார் பேருந்து முதலாளிகள் பல ஆண்டுகளாய் கேட்டுக் கொண்டு இருந்ததை பல்வேறு தரப்பினரும் மறந்து விட்டார்கள். மேலும் தனியார் பால் நிறுவனங்களும்  பால் விலையை ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்திருக்கிறார்கள் என்பது தனியார் பால்களின் விலையை விட ஆவின் விலை ஏற்றியதை வைத்து கணக்கு போட்டுக் கொள்ளலாம்..

தனியார் முதலாளிகளின் சுயநலமே இந்த தேவை இல்லாத விலை ஏற்றம்.

மூன்று:

அணு உலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதால் , பதிலுக்கு அணு உலை அமைத்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல சிறு முதலாளிகள் அணு உலை அமைய வேண்டும் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்..
அணு உலை அமைய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் வைத்திருக்கும் banner  ஐ பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது...

ஆணிவேர் பார்வை:

கண் தெரியாதவன் யானை பார்ப்பது போல் உருவகப் படுத்தி வரையப் பட்ட கார்டூனை துணைக்கு அழைத்து அணு உலை எதிர்ப்பாளர்களை கிண்டல் செய்யும் அவர்கள். அதில் பொதிந்திருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்காமல் விட்டது வேதனையை தருகிறது...


கூடங்குளம் அணு உலை என்பது ஒரு யானை போல் என்றும் மதம் பிடிக்கும் வரை எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றும், மதம் பிடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தால் கட்டுக் கடங்காத சேதம் இருக்கும் என்றும் புனையப் பட்ட கார்டூன்..